பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு போலீசார் விசாரணை

அறந்தாங்கி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-11-15 22:15 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள பிராந்தணியை சேர்ந்தவர் சின்னையா. இவருடைய மனைவி சரோஜா (வயது 48). இவர் நேற்று சொந்த வேலை நிமித்தாக அறந்தாங்கிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு செல்லுவதற்காக, அரசு டவுன் பஸ்சில் ஏறி பிராந்தணி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சரோஜா இறங்க முயற்சித்தார். அப்போது பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது எதிர்பாரத விதமாக பஸ்சின் சக்கரம் சரோஜாவின் காலில் ஏறியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதைகண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக இறந்தார். இது சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்