சாலையோர வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
தஞ்சை அருகே சாலையோர வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
தஞ்சாவூர்,
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கும்பகோணம் பணிமனைக்கு உட்பட்ட இந்த பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. இந்த அரசு பஸ், தஞ்சை வயலூர் அருகே வந்தபோது சாலை வளைவில் திரும்பியது. அப்போது எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை இடது பக்கமாக திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் உரசி அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து நின்றது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும் பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவமும் தவிர்க்கப்பட்டது.