திருவள்ளூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை– பணம் திருட்டு
திருவள்ளூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை– பணம் திருடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கந்தன்கொல்லை சி.என்.கண்டிகையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 41). ரெயில்வேயில் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 10–ந்தேதி பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான நெல்லைக்கு உறவினர்களை பார்ப்பதற்காக சென்றார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, ¼ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து பாஸ்கர் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.