சபாநாயகர் இருக்கை முன் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா கர்நாடக சட்டசபை முடங்கியது
கர்நாடக சட்ட சபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் நேற்று தொடங்கியது.
பெலகாவி,
முதல் நாள் கூட்டத்தில் தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் 2 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்கு சபாநாயகர் கே.பி.கோலிவாட் அனுமதி வழங்கினார். கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மந்திரிகள் பதிலளித்தனர்.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து பேசினார். அவர் பேசுகையில், “போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் மந்திரி பதவியில் நீடித்தால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது.
விசாரணையும் நேர்மையாக நடைபெறாது. எனவே மந்திரி பதவியை கே.ஜே.ஜார்ஜ் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும்“ என்றார்.
இதற்கு பதிலளித்த சட்டசபை விவகாரத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, “சபையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி வழங்க விதிமுறைகளில் அவகாசம் இல்லை. சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால் அதுபற்றி சபையில் விவாதிக்க முடியாது“ என்றார். இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து குரலை உயர்த்தி பேசினர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் பா.ஜனதாவுக்கு எதிராக பேசினர். இதனால் சபையில் கடும் கூச்சல்-குழப்பம் உண்டானது.
பா.ஜனதா உறுப்பினர்கள், மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தனது பதவியை ராஜினாமா செய்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், எக்காரணம் கொண்டும் கே.ஜே.ஜார்ஜ் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்று கூறி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அப்போது பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வழக்கு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் பிடிவாதமாக கூறினர். மேலும் அவர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது முதல்-மந்திரி சித்தராமையா குறுக்கிட்டு, “மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச பா.ஜனதாவினருக்கு அக்கறை இல்லை. விளம்பரத்திற்காக இதுபோல் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள். இந்த கூட்டத்தொடர் அர்த்தப்பூர்வமாக நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வட கர்நாடகம் உள்பட கர்நாடகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கே விவாதித்து அதற்கு தீர்வு காண வேண்டியுள்ளது. அதனால் பா.ஜனதாவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும்“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய மந்திரி ஜெயச்சந்திரா, “பா.ஜனதாவின் கோரிக்கையில் பொது நலன் இல்லை. அதனால் அவர்கள் கொண்டு வந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும்“ என்றார். அப்போது குறுக்கிட்ட பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்குமார், எங்களது பொதுநலன், உங்களது தான் சுயநலன் என்று கூறினார்.
அப்போது சபையில் மீண்டும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் உண்டாகி அமளி ஏற்பட்டது. இதற்கிடையே பா.ஜனதாவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிப்பதாக சபாநாயகர் கே.பி.கோலிவாட் அறிவித்தார். தொடர்ந்து சபையில் கூச்சல்-குழப்பம் நீடித்ததால் சபையை சிறிது நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
மீண்டும் சபை கூடியபோதும் பா.ஜனதாவினர் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இதையடுத்து சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு சபை கூடியது. அப்போதும் பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணாவை தொடர்ந்து நடத்தினர். இதனால் கூச்சல்-குழப்பம் உண்டானது. இந்த அமளிக்கு இடையே மந்திரி ஜெயச்சந்திரா, ஆதிதிராவிடர், பழங்குடியின அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மற்றும் நகர வளர்ச்சித்துறை திருத்த மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் சபையை மறுநாள்(இன்று) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். நேற்று பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர் தர்ணா நடத்தியதால், சபை நடவடிக்கைகள் முடங்கின.