விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பூரண மதுவிலக்கு வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
“விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடக்கிறது. வருமான வரித்துறை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு ஆகும். அவர்கள் எங்கு சோதனை நடத்த வேண்டும் என்றாலும் திட்டமிட்டு செயல்படுவார்கள். இதில் பா.ஜனதாவின் பங்கு எதுவும் இல்லை. பா.ஜனதா கட்சி தவறுக்கு துணை போகாது. தவறு செய்பவர்களை தண்டிக்காமலும் விடாது. யாரையும் தவறு செய்ய தூண்ட மாட்டோம்.
வருமானவரித்துறை நடத்தும் சோதனைக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு வட்டத்துக்குள் இருந்து கொண்டு யாரும் கருத்து சொல்லக்கூடாது. சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்ட சொத்துக்கள் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சேர்த்தது என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்.
அ.தி.மு.க.வை வெளியில் இருந்து யாரும் வந்து அழிக்க வேண்டியது இல்லை. அந்த கட்சியை அ.தி.மு.க.வினரே அழித்து விடுவார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்தது உணர்ச்சிப்பூர்வமானது. இந்த சந்திப்பில் அரசியல் இல்லை. இதை கருணாநிதியின் உறவினர்கள், குடும்பத்தினர் அறிவார்கள்.
தமிழகத்தில் நடைபெறும் விபத்துகளுக்கு மதுபோதையே முக்கிய காரண மாகும். விபத்துகளால் ஏற்படும் 75 சதவீத மரணங்களுக்கு மதுவே காரணம் என்று தெரிய வந்துள்ளது. எனவே விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.
தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்தவர்களின் தவறால்தான் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த பாதிப்பை தடுப்பதற்கு ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி அமைக்காமல் ஆட்சி அமைக்கவில்லை. தமிழகத்தில் நாங்கள் தனித்து போட்டியிட தயார். அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட தயாரா? கழகங்கள் இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை அமல்படுத்தவே ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டது. இதில் மீன்வலை உற்பத்திக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் குமரி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் உள்ள மீன்வலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் தொழில் முடங்கிப்போனதாகவும் கூறினர். எனவே மீன்வலைக்கான வரியை குறைக்க கோரி இருந்தனர். இதுகுறித்து நிதி மந்திரியிடம் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் வரிகுறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது மீன் வலைக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள 110 மீன்வலை உற்பத்தி நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். அவற்றில் பணிபுரியும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். நாடு முழுவதும் உள்ள மீன்வலை நிறுவனங்களும் பயனடையும். இதனால், மீனவர்களின் சுமையும் குறைந்துள்ளது. மீனவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக மத்திய அரசு எப்போதும் செயல்படும்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னதாக மீன்வலை உற்பத்திக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு செய்யப்பட்டதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை நேற்று குமரி மாவட்ட மீன்வலை உற்பத்தியாளர்களான முன்னாள் எம்.பி. எம்.சி.பாலன், ஷாஜகான் உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவருக்கு ஆளுயர மாலையும் அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.