ஏரியில் முதலை இருப்பதாக பீதி; தண்ணீருக்குள் யாரும் இறங்க வேண்டாம் அதிகாரிகள் எச்சரிக்கை
சேத்துப்பட்டு அருகே ஓதலவாடியில் உள்ள ஏரியில் முதலை இருப்பதாக வந்த தகவலையடுத்து மறு உத்தரவு வரும் வரை ஏரியில் உள்ள தண்ணீருக்குள் யாரும் இறங்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.;
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள ஓதலவாடி கிராமத்தில் 95 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியில் தற்பொது முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. ஏரியின் அருகில் சாமந்திபுரம், கிளுவாநத்தம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் ஏரிக்கு சென்று குளித்தும், துணிகளை துவைத்தும் வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சாமந்திபுரம் பகுதியை சேர்ந்த லலிதா என்பவர் குளிப்பதற்காக ஏரிக்கு சென்று உள்ளார். அப்போது ஏரியின் கரையில் முதலை ஒன்று இருந்தது. லலிதா அந்த இடத்துக்கு சென்றதும் அந்த முதலை தண்ணீருக்குள் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த லலிதா அலறியபடியே கிராமத்திற்குள் வந்து தகவல் அளித்தார்.
அதேபோல் கிளுவாநத்தம் கிராமத்தை சேர்ந்த உமா என்பவரும் குளத்தில் குளிப்பதற்காக சென்றபோது அவரும் ஏரியில் முதலையை பார்த்து உள்ளார். இது குறித்து 2 கிராமங்களிலும் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
தகவல் அறிந்த தாசில்தார் அரிதாஸ், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து வருவாய்த்துறையினர், கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். ஏரியில் உள்ள முதலையை பிடிக்கும் முயற்சியில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மறுஉத்தரவு வரும்வரை பொதுமக்கள் யாரும் ஏரியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை ஏரிக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீசாரும் ஒலிபெருக்கி மூலம் கிராமங்களுக்குள் சென்று அறிவிப்புகளை வெளியிட்டனர்.