சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
கறம்பக்குடி அருகே பொதுமக்களிடம் சீட்டு பணம் வசூல் செய்து, ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர், கெண்டையன்பட்டி, வெள்ளாவிடுதி, மீளம்பட்டி ஆகிய கிராமத்தை சேர்ந்த மக்களிடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புதுடெல்லியை சேர்ந்த ஒரு தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்று மாதம், மாதம் ரூ.100, ரூ.200, ரூ.500 என்ற அளவில் சீட்டு பணம் வசூலித்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் சீட்டு கட்டிய தொகைக்கு இரட்டிப்பாக பணம் தருவதாகவும், இடைப்பட்ட காலத்தில் விபத்தில் உயிர் இழந்தால் காப்பீடு தொகை தருவதாகவும் உறுதி அளித்தது.
ரூ.10 லட்சம் மோசடி
இதன்படி வெள்ளாளவிடுதியை சேர்ந்த சுப்பையா என்ற முகவர் மூலம் அப்பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ரூ.10 லட்சம் வரை சீட்டு பணம் செலுத்தி உள்ளனர். 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் முதிர்வு தொகையை தரும்படி முகவரிடம், பணத்தை கட்டியவர்கள் கேட்டுள்ளனர். அப்போது அந்த முகவர் காப்பீடு நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறி கொடுத்த பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார். மேலும் பல முறை முயற்சி செய்தும் பணம் கிடைக்கவில்லை.
இதனால் ரூ.10 லட்சம் மோசடி நடந்ததை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வெள்ளாளவிடுதியை சேர்ந்த முருகேசன், செல்வராஜ், ஆறுமுகம் ஆகியோர் மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.