விட்டுக்கொடுத்து வாழாத காரணத்தால் கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் அதிகமாக உள்ளன நீதிபதி தகவல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழாத காரணத்தால் கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் அதிகமாக உள்ளன என்று சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட நீதிபதி குமரகுரு பேசினார்.;
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகேயுள்ள மங்கப்பட்டிபுதூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திடலில் தேசிய மக்கள் நீதிமன்ற விழிப்புணர்வு நாளை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் எஸ்.தென்னரசு வரவேற்றார். துறையூர் சார்பு நீதிமன்ற நீதிபதியும், துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான நீதிபதி சி.ராஜலிங்கம், துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி மும்மூர்த்தி, துறையூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.வடிவேல், வழக்கறிஞர்கள் ரெங்கசாமி, எ.கணேசன் ஆகியோர் பேசினார்கள். திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான நீதிபதி எஸ்.குமரகுரு தலைமை தாங்கி பேசியதாவது:-
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கும், சமூக ரீதியில் பின்தங்கிய மக்களுக்கும் சட்டங்கள் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் சட்டப்பணிகள் ஆணைக்குழுவானது உருவாக்கப்பட்டது. உங்களுடைய வழக்குகள் எதுவாக இருந்தாலும் சரி வழக்கு நடத்த போதிய வருமானம் இல்லை என்றாலோ, வெள்ளைத்தாளில் எழுதி கொடுத்தால் அந்த வழக்கில் உண்மைத்தன்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு, வழக்குகளை தீர்த்து வைப்பார்கள்.
விவாகரத்து வழக்குகள்
இன்று நீதிமன்றங்களில் அதிகமாக உள்ள வழக்குகள் குடும்ப சம்பந்தமான விவாகரத்து வழக்குகள்தான். இரண்டாவது மோட்டார் வாகன விபத்து வழக்குகள். இந்த இரண்டு வழக்குகளுமே மனிதர்களால் செய்யக்கூடிய தவறுகளால் ஏற்படுபவை. குடும்பத்தை பொறுத்தவரை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். கணவன்-மனைவி பிரச்சினையை நீதி மன்றத்திற்கு கொண்டுவரக் கூடாது.
எல்லா மாவட்டங்களிலுமே விவாகரத்து வழக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகிக்கொண்டிருக்கிறது. நீதிமன்றம் விவாகரத்து வழக்கை உடனடியாக எடுத்துக்கொள்வது இல்லை. இருவரையும் வரவழைத்து சேர்ந்து வாழ முயற்சிசெய்து வருகிறோம். இதுதான் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முக்கிய நோக்கமாகும்.
மக்கள் நீதிமன்றம்
அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி மகாலோக் அதாலத் என்ற மக்கள் நீதி மன்றம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மக்கள் நீதி மன்றத்தில் உங்கள் வழக்குகளை சமாதானமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் நீதிமன்றத்தில் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. பாகப்பிரிவினை வழக்கு தீர்த்து வைக்கப்பட்டால் அண்ணன்-தம்பி உறவு மீண்டும் துளிர்வதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
மோட்டார் வாகன விபத்துகளை பொறுத்தவரை பிள்ளைகளுக்கு மோட்டார் வாகன விதிகளை கூறாமல், உரிமம் பெறாமல் ஓட்டுவதற்கு வண்டி கொடுத்து, அது விபத்தில் சிக்கினால் நீங்கள்தான் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும். நமது நாட்டை பொறுத்தவரையில் போக்குவரத்து வாகனங்கள் அதிகரிக்கும் வகையில் சாலையினுடைய மேம்பாடு சரியான வகையில் இன்னும் உருவாகவில்லை.
நீதிமன்றத்துக்கு வரக்கூடாது
இறைவன் கொடுப்பதை நாம் சந்தோசமாக மக்களோடு மக்களாக அமைதியாகவும், மிகவும் தன்மையாகவும், எல்லோருடனும் அனுசரித்தும் நமது சட்ட விதிமுறைகளை பின்பற்றி வாழ வேண்டும். சாதாரண காரணங்களுக்கெல்லாம் கணவன், மனைவி நீதிமன்றத்திற்கு வரக்கூடாது. தவிர்க்கமுடியாத சூழ்நிலையில்தான் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என குடும்ப வழக்குகளை பொறுத்தவரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொது மக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. சட்ட பணிகள் குறித்த ஒலி,ஒளி காட்சி காட்டப்பட்டது. இறுதியாக வழக்கறிஞர் சங்க செயலாளர் கே.செல்லதுரை நன்றி கூறினார்.