பூஜைக்கு அழைத்து மைனர் பெண் கற்பழிப்பு மந்திரவாதி மீது வழக்குப்பதிவு

பவாயில் பூஜைக்கு அழைத்து மைனர் பெண்ணை கற்பழித்த மந்திரவாதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-11-14 22:45 GMT

மும்பை,

மும்பை பவாயில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நாகேஷ் பண்டாரி. மந்திரவாதி. இவர் கட்டிடத்தின் அருகே உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் 17 வயது பெண்ணை தனது வீட்டில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளும்படி அடிக்கடி அழைத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், மைனர் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த அவளது தாய் சம்பவத்தன்று மந்திரவாதியின் வீட்டிற்கு சென்ற தனது மகளை ரகசியமாக பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார்.

அப்போது மந்திரவாதி, அந்த மைனர் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து மைனர் பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். மந்திரவாதியை பிடித்து சத்தம் போட்ட அந்த பெண் தனது மகளை அவரிடம் இருந்து மீட்டு விவரத்தை கேட்டார்.

அப்போது பூஜைக்கு வரும்படி அழைத்து தன்னை பலமுறை நாகேஷ் பாண்டே கற்பழித்ததாக மைனர் பெண் கூறினார். இதையடுத்து அந்த பெண் தனது மகளை பவாய் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அந்த மந்திரவாதி மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நாகேஷ் பண்டாரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக பவாய் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்