ஓட்டல் லிப்டில் வெளிநாட்டு பெண்ணை மானபங்கம் செய்த நடைபாதை வியாபாரி கைது

ஓட்டல் லிப்டில் வெளிநாட்டு பெண்ணை மானபங்கம் செய்த நடைபாதை வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2017-11-14 22:00 GMT

மும்பை,

தென்கொரியாவை சேர்ந்த 30 வயது பெண் ஆராய்ச்சி படிப்பிற்காக கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை வந்தார். அவர் பைதோனி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க சென்றார். அவர் விமானநிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்ற போது அதன் வாசலில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். வெளிநாட்டு பெண் அந்த நபரை ஓட்டல் ஊழியர் என நினைத்து கொண்டார். எனவே அவர், அந்த நபரிடம் தனது பெட்டிகளை தூக்க உதவி செய்யுமாறு கூறினார். இதையடுத்து அந்த நபர் வெளிநாட்டு பெண்ணின் பெட்டிகளை லிப்டில் கொண்டு வந்து வைத்தார்.

இந்தநிலையில் வெளிநாட்டு பெண் அறைக்கு செல்வதற்காக லிப்டில் சென்ற போது அந்த நபரும் உள்ளே சென்றார். அவர் திடீரென வெளிநாட்டு பெண்ணை கட்டிபிடித்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டு பெண் லிப்டை நிறுத்தி வெளியே ஓடிவந்தார். மேலும் உதவி கேட்டு சத்தம்போட்டார். ஓட்டல் ஊழியர்கள் வெளிநாட்டு பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டவரை பிடித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பைதோனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் வெளிநாட்டு பெண்ணை மானபங்கம் செய்தவர் முகமதுஅலிரோடு பகுதி நடைபாதை வியாபாரி மயூர் கோக்ரே என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்