ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.30 ஆயிரம் மோசடி

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.30 ஆயிரம் மோசடி புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் சிக்கினார்.

Update: 2017-11-14 22:45 GMT

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள தீயனூரைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 45). இவர் காரியாபட்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது அருகில் நின்ற ஒரு பெண், தான் பணம் எடுத்து தருவதாக லட்சுமியிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது ஏ.டி.எம். கார்டை அந்தப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணும் ரூ.3 ஆயிரம் எடுத்துக் கொடுத்துள்ளார். பின்னர் லட்சுமி வீட்டிற்கு சென்று செல்போனை பார்த்தபோது ரூ.13 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி காரியாபட்டி போலீசில் புகார் செய்தார்.

இதே போல் காரியாபட்டி அருகே உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணிடமும் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவது போல் நடித்து ஒரு பெண் ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரிலும் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 2 பெண்களிடமும் மோசடியில் ஈடுபட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த சீதாலட்சுமியை (37) என்ற பெண்ணை பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்