தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம்
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடந்தது.
ஆம்பூர்,
மேலும் மின்னூர் காளிகாபுரம், கணபதிநகர், லட்சுமிநகர், அரச பட்டு வளர்ச்சித்துறை பகுதியில் உள்ள பகுதிக்கு செல்ல சாலையை கடக்க வேண்டும். சாலையை கடந்து செல்வதற்கு வழி எவுதும் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலபேர் உயிர் இழந்துள்ளனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.