பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டசபை கூடியது
பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டசபையின் 10 நாள் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. இதில் தலைவர் கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
பெலகாவி,
கர்நாடக அரசு அறிவித்தப்படி கர்நாடக சட்டசபையின் 10 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் கே.பி.கோலிவாட் மரபுப்படி மரணம் அடைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முன்னாள் முதல்-மந்திரி தரம்சிங், விஞ்ஞானி யு.ஆர்.ராவ், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், எம்.எல்.ஏ.க்கள் கமருல் இஸ்லாம், சிக்கமாது உள்பட தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் மீது முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
பத்திரிகையாளர் கவுரி லங்கேசின் மரணம் இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு ஆகும். இது ஒரு கொடூரமான கொலை. இது மனிநேயத்தை கொலை செய்தது போன்றது ஆகும். நேர்மையாகவும், துணிச்சலாகவும் தனது பணியை ஆற்றியவர். சமூக நலனுக்காக நடந்த பல்வேறு போராட்டங்களில் அவர் பங்கேற்றார். அவரை கொலை செய்ததில் சமுதாயத்தில் ஒரு பீதியை உருவாக்கும் நோக்கமும் அடங்கியுள்ளது. இதை அரசு சகித்துக்கொள்ளாது.
நியாயத்திற்காக போராட்டம் நடத்துபவர்களை கொலை செய்வது என்பது நல்லதல்ல. கொலையாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் கொலையாளிகளை கைது செய்து கடும் தண்டனைக்கு உட்படுத்தாமல் விடமாட்டோம். இதில் மாநில அரசு நேர்மையான முறையில் செயலாற்றி வருகிறது.
முன்னாள் முதல்-மந்திரி தரம்சிங் வெற்றி-தோல்விகளை சரிசமமாக எடுத்துக் கொண்டவர். அவர் மறைவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பீதர் மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவை அழைத்து வந்து என்னை சந்தித்தார். அவர் எடுத்துக் கொண்ட பணியை முடிக்காவிட்டால் அவசரப்பட்டு எழுந்து போகமாட்டார். அடம்பிடித்து அந்த பணியை செய்து முடிப்பார்.
வெற்றி பெறும்போது அதை தூக்கி கொண்டாடாமல், தோல்வியை தழுவும்போது மனம் உடைந்துபோகாமல் இரண்டையும் சமமாக ஏற்கும் மன பக்குவம் உடையவர். கலபுரகி பகுதியில் மல்லிகார்ஜுன கார்கே, தரம்சிங்கை ‘லவகுச’ ஜோடி என்றே மக்கள் அழைத்தனர். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் மிக நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தனர். கவுரி லங்கேஷ், தரம்சிங் உள்பட இந்த இரங்கல் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.