கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் கலெக்டரிடம் மனு
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்”்் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 471 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. தற்போது ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் நடக்கிறது. இந்த நிலையில் அந்த கிராமத்திற்கு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து இல்லை. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு மணல் குவாரி அமைத்து மணல் அள்ளப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் முன்வந்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசு மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில், கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.