மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கால்நடைகளுடன் மனு கொடுக்க வந்த விவசாயிகளால் பரபரப்பு
புதுக்கோட்டையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கால்நடைகளுடன் மனு கொடுக்க விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் விவசாயிகள் சங்கத்தினர் தங்களது கால்நடைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கால்நடைகளுடன் உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதி கிடையாது என கூறினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் அழைத்து வந்த கால்நடைகளை வெளியே விட்டு, விட்டு உள்ளே சென்று மாவட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பெரிய கால்நடை மருத்துவமனை கொத்தமங்கலத்தில் தான் உள்ளது. இந்த மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் இந்த கால்நடை மருத்துவமனையில் தான் கொத்தமங்கலத்தை சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. இந்த மருத்துவமனையில் தற்போது ஒரு கால்நடை மருத்துவர் மட்டும் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார். எனவே கொத்தமங்கலத்தில் நிரந்தரமாக பணியாற்ற ஒரு கால்நடை மருத்துவரை பணி அமர்த்த வேண்டும் என கூறியிருந்தனர்.
கூட்டத்தில் பொன்னமராவதி தாலுகா கூடலூர், சித்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், பொன்னமராவதி தாலுகா தெற்கு வெள்ளாறு, நெருஞ்சிக்குடி ஆறு ஆகியவற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நீர்மட்டம் குறைந்து பொதுமக்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
புதுக்கோட்டை காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகரத்தின் மையத்தில் உள்ள அம்மன் சன்னதி முதல் பர்ஜிமியான் பஜார், அனுமார் கோவில் சந்து, தெற்கு 3-ம் வீதி, தெற்கு 4-ம் வீதி வரை சுமார் 450 பேர் காய்கனி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் புதுக்கோட்டை நகராட்சி சார்பில் காய்கனி மார்க்கெட் அமைக்கப்படாததால் தனியார் இடங்கள், சாலை ஓரங்களில் கடை போட்டு வியாபாரிகள் காய்கனிகளை விற்பனை செய்து வருகிறார்கள். எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டையில் நிரந்தரமாக காய்கனி மார்க்கெட் அமைத்து கொடுத்தால், நாங்கள் போக்குவரத்து இடையூறு இன்றி வியாபாரம் செய்வோம் என கூறியிருந்தனர்.
மணமேல்குடி தாலுகா செம்மனாம்பொட்டல் கிராமத்தினர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் உள்ள ஆவுடையார்கோவில்- கோட்டைப்பட்டினம் சாலை சேதமடைந்து உள்ளது. இது குறித்து நடவடிக்கை வேண்டும் என கூறியிருந்தனர்.
கறம்பக்குடி தாலுகா ஐயங்காடு, முருங்கைகொல்லை, செல்வநாதபுரம் உள்ளிட்ட கிராமத்தில் இருந்து வந்த பெண்கள் கொடுத்த மனுவில், ஐயங்காடு, முருங்கைகொல்லை. செல்வநாத புரம் உள்ளிட்ட சில கிராமத்தினர் செல்வநாதபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த ரேஷன் கடையை செல்வநாதபுரத்தில் இருந்து தீர்த்தாணிப்படி பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் பல கிராமத்தினர் கடும் அவதி அடைவார்கள். எனவே செல்வநாதபுரத்திலேய தொடர்ந்து ரேஷன் கடையை நடத்த வேண்டும். இனிமேல் செல்வநாதபுரத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு அரசு தரப்பில் வாடகை தர தேவையில்லை. நாங்கள் வாடகை இல்லாமல் கடைகள் தர தயாராக உள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.