ஊழியர்கள், பணியமர்த்தப்பட்டவர்கள் குறித்து அரசு துறைகளில் தணிக்கை செய்ய வேண்டும் கவர்னர் உத்தரவு

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள் பலர் அரசியல்வாதிகளின் சொந்த வாகனங்களை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

Update: 2017-11-13 23:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள் பலர் அரசியல்வாதிகளின் சொந்த வாகனங்களை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கவர்னர் கிரண்பெடிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அந்த புகாரில், புதுவை சாலை போக்குவரத்து கழக டிரைவர்கள் 37 பேர் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களை ஓட்டுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து துறை ஆணையருக்கு, கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள ஊழியர்கள் மற்றும் பணியமர்த்தப்பட்டவர்கள் குறித்து தணிக்கை செய்ய வேண்டும் என தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுச்சேரியில் பணி நியமனத்திற்கு தனி திட்டம் தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்