மானாமதுரை ரெயில் நிலையத்தில் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி

மானாமதுரை ரெயில் நிலையத்தில் குடிநீரு கிடைக்காமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2017-11-13 21:45 GMT

மானாமதுரை,

மானாமதுரையில் கடந்த சில மாதங்களாக சுகாதாரகேடு மற்றும் குடிநீர் கிடைக்காமல் ரெயில் பயணிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ரெயில் அதிகாரிகள் தெரிவித்தும் சுகாதார பணிக்கு ரெயில் நிர்வாகம் யாருமே சுகாதார பணியாளர்களை நியமிக்கவில்லை. இந்த நிலையில் குளிர்ந்த நீர் பெட்டி அனைத்தையும் அகற்றிவிட்டனர்.

இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு தினசரி திருச்சி– ராமேசுவரம், திருச்சி– விருதுநகர், மதுரை–ராமேசுவரம், கொல்லம்–ராமேசுவரம் உள்ளிட்ட பயணிகள் ரெயிலும், சேது, சென்னை, ஓஹா, திருப்பதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வந்து செல்கின்றன. தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக இங்கு ரெயில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெளியூர் பயணிகள் பலரும் ரெயில் நிலையத்தில் குடிக்க தண்ணீர் இல்லாததால் ஒரு லிட்டர் தண்ணீர் 15 முதல் 25 ரூபாய் வரை விரை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

முதலாவது,2–வது நடைமேடையில் இருந்த குடிநீர் தொட்டியை சில மாதங்களுக்குமுன் அகற்றி விட்டனர். இதுவரை மீண்டும் அதே இடத்தில் வைக்கவில்லை. இதனால் காசில்லாத பயணிகள் ரெயில் நிலையத்தின் வெளியே உள்ள டீகடைகள், ஓட்டல்களில் தண்ணீர் கேட்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகம் உடடினயாக குடிதண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்