தாயை கழுத்தை அறுத்து கொன்ற மகன் கைது குடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

குடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-12 21:40 GMT

வசாய்,

குடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

பிணமாக மீட்பு

பால்கர் மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் மாகலே (வயது42). இவர், தாய் சீதாபாய் (70) மற்றும் குடும்பத்தினருடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். சம்பவத்தன்று நரேஷ் மகாலேவின் குடும்பத்தினர் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். வீட்டில் நரேஷ் மகாலேயும், சீதாபாயும் மட்டும் இருந்தனர். இந்தநிலையில் கடந்த 10–ந்தேதி அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டிற்குள் சீதாபாய் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சம்பவம் குறித்து வசாய் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீதாபாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகன் கைது

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சீதாபாயை அவரது மகனே கழுத்தை அறுத்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–

நரேஷ் மகாலேவிற்கு குடிப்பழக்கம் இருந்து உள்ளது. சம்பவத்தன்று அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தாய் சீதாபாய் ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என கேட்டு உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நரேஷ் மகாலே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாய் என்றும் பாராமல் சீதாபாயை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நரேஷ் மகாலேவை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.....................

மேலும் செய்திகள்