உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சேலம் கிழக்கு மற்றும் புறநகர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் ஆத்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட அவைத்தலைவர் சி.கோவிந்தன் தலைமை தாங்கினார்.

Update: 2017-11-12 22:30 GMT

ஆத்தூர்,

சேலம் கிழக்கு மற்றும் புறநகர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் ஆத்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட அவைத்தலைவர் சி.கோவிந்தன் தலைமை தாங்கினார். ஆத்தூர் நகர செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. சுபா ரவி, கேப்டன் மன்ற மாநில துணை செயலாளர் கே.ஏ.சுல்தான்பாஷா ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில், தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழக வளர்ச்சிக்காகவும் உழைப்பதாக கூறி, கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மாநில அரசு விரைவில் நடத்த வேண்டும், சேலம் மாவட்டத்தில் கந்து வட்டி வாங்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் குமாரசாமி, பெத்தநாயக்கன்பாளையம் கண்ணன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நரசிங்கபுரம் நகர செயலாளர் டி.மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்