அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்திச்சென்ற மினிலாரி சிறைபிடிப்பு
கொடைக்கானல் தாலுகா கே.சி.பட்டி கிராமத்தில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு மதிய வேளையில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளி வளாகத்திலேயே சத்துணவு கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்ட அர
பெரும்பாறை,
கொடைக்கானல் தாலுகா கே.சி.பட்டி கிராமத்தில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு மதிய வேளையில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளி வளாகத்திலேயே சத்துணவு கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்ட அரிசி மூட்டைகளில் 4 மூட்டைகளை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் மினிலாரி மூலம் கடத்திச்செல்வதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொதுமக்கள் மினிலாரியை சிறைபிடித்தனர். மேலும் கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரனுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் மினிலாரி, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அ.தி.மு.க. பிரமுகரிடமும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.