திருச்செந்தூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
திருச்செந்தூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்,
காயல்பட்டினம், செல்வராஜபுரத்தை சேர்ந்தவர் பட்டாணி மகன் பாலகிருஷ்ணன் (வயது 19). இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு சலவையகத்தில் வெளியே இருந்து துணிகளை வாங்கி வந்து கொடுத்து, துவைத்து தேய்த்த பின்னர் அவைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்து வருகிறார்.
கடந்த 10-ந் தேதி அவர், சோனகன்விளைக்கு துவைத்து தேய்த்த துணிகளை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நத்தகுளம் அருகே செல்லும் போது அவரை 2 பேர் வழிமறித்து அடித்து உதைத்து செல்போன் மற்றும் ரூ.500-யை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
2 வாலிபர்கள் கைது
இந்த நிலையில் திருச்செந்தூர் பஸ்நிலையத்தில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே பராக்கிரமபாண்டி கீழசாமியாத்தை சேர்ந்த திருமால் மகன் இசக்கிராஜா (19), கால்வாய் மாதாங்கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் வைகுண்டராமன் (20) என்பதும், அவர்கள் நத்தகுளம் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து பாலகிருஷ்ணனிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.