அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியத்தால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் சாவு
அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியத்தால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மங்களூரு,
அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியத்தால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிப்புதட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா பெட்டம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனப்பா. இவருடைய மனைவி சுமதி (வயது 42). இந்த நிலையில் கடந்த 3–ந்தேதி சுமதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால், அவரை சீனப்பா புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சுமதியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரை செய்தனர். இதையடுத்து சுமதியை, சீனப்பா வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு சுமதியை பரிசோதனை செய்த டாக்டர், உடல் நிலை சரியாகிவிட்டதாக கூறினார். இதையடுத்து சீனப்பா தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு அழைத்து வந்த அவருக்கு உடல் நிலை மோசமாகி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனப்பா, சுமதியை புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
பெண் சாவுஅங்கிருந்தவர்கள், இங்கு டாக்டர்கள் இல்லை. உடனடியாக சுள்ளியா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினார்கள். இதையடுத்து அவர் தனது மனைவியை சுள்ளியா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கும் டாக்டர்கள் சுமதிக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அவர், சுமதியை மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சுமதி பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனப்பா, தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதது, கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
புகார்இதுகுறித்து அவர் புத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். இதில், புத்தூர், சுள்ளியா, மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியத்தால் எனது மனைவி உயிரிழந்துள்ளார். அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளித்திருந்தால் எனது மனைவி உயிர் பிழைத்திருப்பார். இதனால் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.