உல்லாசம் அனுபவித்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
பெங்களூருவில், முகநூலில் அறிமுகமான இளம்பெண்ணை காதலித்து, அவருடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு பின்னர் திருமணத்திற்கு மறுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில், முகநூலில் அறிமுகமான இளம்பெண்ணை காதலித்து, அவருடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு பின்னர் திருமணத்திற்கு மறுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர், இளம்பெண்ணுக்காக ரூ.80 லட்சம் செலவழித்ததும் அம்பலமாகி உள்ளது.
இளம்பெண்ணுடன் உல்லாசம்பெங்களூரு விஜயநகர் அருகே வசித்து வருபவர் அஜய். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஜெயநகர் அருகே வசிக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல்(பேஸ்புக்) மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அஜய்க்கும், இளம்பெண்ணுக்கும் இடையே நட்பு உண்டானது. அந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது.
மேலும் இளம்பெண்ணை அஜய் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இளம்பெண்ணை திருமணம் செய்ய அஜய் மறுப்பதாக தெரிகிறது.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைதுஇதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் அஜய் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில், தானும் அஜயும் காதலித்ததாகவும், மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அஜய் தன்னிடம் உல்லாசம் அனுபவித்து விட்டதாகவும், ஆனால் தற்போது தன்னை அவர் திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறி இருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான அஜயை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியே வந்துள்ளது.
ரூ.80 லட்சம் செலவுஅதாவது முகநூலில் இளம்பெண்ணின் அழகை பார்த்து மயங்கிய அஜய், அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். பின்னர் முகநூல் மூலமாகவே இளம்பெண்ணுடன் நட்பை வளர்த்து கொண்ட அவர், பின்னர் இளம்பெண்ணை தனியார் ஓட்டலில் வைத்து முதலில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தனது காதலை இளம்பெண்ணிடம் அஜய் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர். இளம்பெண்ணான தனது காதலியை பல்வேறு மாநிலத்திற்கு விமானத்தில் அஜய் அழைத்து சென்றுள்ளார். மேலும் தனது காதலி கேட்டதையெல்லாம் அஜய் வாங்கி கொடுத்துள்ளார்.
இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.80 லட்சத்தை அஜய் செலவழித்துள்ளார். தனது சம்பள பணம் போக பல லட்சம் ரூபாயை கடன் வாங்கி காதலிக்காக அவர் செலவு செய்துள்ளார். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்த போது 10–க்கும் மேற்பட்ட முறை இளம்பெண்ணுடன் அஜய் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு, தனது குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி அவரை திருமணம் செய்ய அஜய் மறுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான அஜயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.