கட்டுமான பணியின் போது 2–வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

சென்னை போரூர், சக்தி நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

Update: 2017-11-12 22:00 GMT

பூந்தமல்லி,

சென்னை போரூர், சக்தி நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமராவ்(வயது 38), அவருடைய மனைவி சாவித்திரி (35) இருவரும் அங்கேயே தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தின் 2–வது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த சாவித்திரி, எதிர்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சாவித்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்