திருவள்ளூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை; 4 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2017-11-12 21:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், சதாசிவம் மற்றும் போலீசார் கடம்பத்தூர் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது போலீசார் 20–க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்த போது அதில் 4 கடைக்காரர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து 4 கடைகளின் உரிமையாளர்களான பன்னீர்செவ்வம் (வயது 55), கோவிந்தம்மாள் (38) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் திருமழிசை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தார்கள். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்த பொது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரான அமாவசை (35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் தாலுகா போலீசார் காக்களூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு கடையின் உரிமையாளரான கிருஷ்ணகுமார் (42) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்