மரத்தில் கழற்றி போட்ட சட்டையில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து தொழிலாளி சாவு

ஆரல்வாய்மொழி அருகே, மரத்தில் கழற்றி போட்ட சட்டையில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-11-12 23:15 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அழகியநகரை சேர்ந்தவர் வேலு (வயது 67), விவசாய கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பண்டாரபுரம் பகுதியில் வயலில் வேலைக்கு சென்றார். அங்கு தனது சட்டையை கழற்றி அந்த பகுதியில் நின்ற ஒரு சவுக்கு மரத்தில் மாட்டி விட்டு வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் அந்த சட்டைக்குள் பாம்பு சென்று பதுங்கி இருந்துள்ளது. இதற்கிடையே வேலை முடிந்த பின்பு, மீண்டும் சட்டையை எடுப்பதற்காக வேலு சென்றார்.

பாம்பு இருப்பதை அறியாமல், மரத்தில் கழற்றி போட்ட சட்டையை எடுத்து, தோளில் போட்டார். அப்போது, சட்டையில் இருந்த பாம்பு வேலுவின் தோள் பகுதியில் கடித்தது. இதை பார்த்த வேலு அதிர்ச்சி அடைந்தார். பாம்பு அங்கிருந்து தப்பியது.

பின்னர் வேலு ஆரல்வாய்மொழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி வேலு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டையில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்