இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும், மதமாற்றம் தொடர்பாக பிரசாரம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.;
நாகர்கோவில்,
மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும், மதமாற்றம் தொடர்பாக பிரசாரம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுபா.முத்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரமேஷ், தென் மண்டல தலைவர் புலியூர் பாலமுருகன், மாநில செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் இசக்கிராஜன், கருணா சுரேந்திரன், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.