பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

முல்லுண்டு - மாட்டுங்கா
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள முல்லுண்டு - மாட்டுங்கா இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை விரைவு ரெயில்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.56 மணி வரை கல்யாணில் இருந்து வரும் விரைவு ரெயில்கள் அனைத்தும் திவா - பரேல் இடையே ஸ்லோ வழிப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் திவா - பரேல் இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வரும். பரேலுக்கு பிறகு மீண்டும் இந்த ரெயில்கள் விரைவு வழிப்பாதையில் இயக்கப்படும்.
காலை 10.05 மணி முதல் பிற்பகல் 3.22 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் விரைவு ரெயில்கள் அனைத்தும் காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு, திவா மற்றும் வழக்கமாக நிற்கும் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
துறைமுக வழித்தடம்
துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, சி.எஸ்.எம்.டி. - பாந்திரா இடையே இன்று காலை 11.10 மணி முதல் மாலை 4.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.47 மணி வரை சி.எஸ்.எம்.டி. மற்றும் வடலா ரோட்டில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு ரெயில் சேவை இருக்காது. காலை 9.53 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் குர்லா - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 9.56 மணி முதல் மாலை 4.43 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, அந்தேரிக்கும், காலை 10.45 மணி முதல் மாலை 5.09 மணி வரை அந்தேரி, பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது.
மேற்கு ரெயில்வே
மேற்கு ரெயில்வேயில் இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை சர்ச்கேட் - மும்பை சென்ட்ரல் இடையே விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பணிகள் நடைபெறும் நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் சர்ச்கேட் - மும்பை சென்ட்ரல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.