ரவுடிகள் இடையே கோஷ்டி மோதல் வாய்ப்பு: முன்னெச்சரிக்கையாக 11 பேர் கைது

செங்குன்றம், பாடியநல்லூர், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக வெட்டுக்குத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Update: 2017-11-11 22:00 GMT

செங்குன்றம்,

செங்குன்றம், பாடியநல்லூர், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக வெட்டுக்குத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு ரவுடி செல்லா ஒரு கோஷ்டியாகவும், மற்றொரு ரவுடி கதிர் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு ரவுடி கோஷ்டிகள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது.

இந்தநிலையில் இரு கோஷ்டியினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மாதவரம் துணை கமி‌ஷனர் கலைச்செல்வனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து புழல் உதவி கமி‌ஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேந்தர், சப்–இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார்(செங்குன்றம்), மற்றொரு சதீஷ்குமார்(புழல்) ஆகியோர் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஏ.நகர், ஜோதிநகர், பி.டி.மூர்த்திநகர், பாடியநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த நந்தகோபால்(வயது 27), சந்தீப்(21), முருகன்(21), சிவகுமார்(25), மணிகண்டன்(29), கார்த்திக்(24), தினேஷ்(24), சிவா என்ற பிசிரு சிவா(24) உள்பட இரு ரவுடி கோஷ்டிகளையும் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்