கூவம் ஆற்றை சிரமத்துடன் கடந்து செல்லும் பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால் கூவம் ஆற்றில் மழை வெள்ளம் செல்கிறது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால் கூவம் ஆற்றில் மழை வெள்ளம் செல்கிறது. சத்தரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தரை கூவம் ஆற்றை கடந்துதான் கடம்பத்தூர், பேரம்பாக்கம், திருவள்ளூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லமுடியும். தற்போது மழை நீர் செல்வதால் ஆற்றின் குறுக்கே அதிகாரிகள் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக பாதை அமைத்து கொடுத்துள்ளனர். அதன் வழியாக சத்தரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.