சேலத்தில் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் சேலம் மாவட்ட கூட்டமைப்பு சார்பில் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் சேலம் மாவட்ட கூட்டமைப்பு சார்பில் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், குழு தலைவர் திருவேரங்கன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரத்துறை மாவட்ட செயலாளர் செல்வம் வரவேற்றார்.
ஊராட்சி செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்கள் போல இணையான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்கள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது வருகிற 11–ந் தேதி சேலத்தில் போராட்ட அறிவிப்பு மாநாடு நடைபெறும் என கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.