புள்ளம்பாடி வாய்க்காலில் மீண்டும் உடைப்பு ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்
புள்ளம்பாடி வாய்க்காலில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமயபுரம்,
கடந்த (அக்டோபர்) மாதம் முக்கொம்பு வாத்தலையிலிருந்து புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்காக 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாகவும், இப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாகவும் புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால், பங்குனி வாய்க்கால் ஆகிய 3 வாய்க்கால்களிலும் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடுகிறது.
இந்த வாய்க்கால்களின் கரைகள் பலவீனமாக உள்ளதாலும், மண்டிக்கிடக்கும் புதர்களை தூர்வாரி அகற்றாததாலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. கடந்த வாரம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட்டியில் பெருவளை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வயல்களில் புகுந்ததால் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.
உடனே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக உடைப்பை சரி செய்தனர். அதேபோல மண்ணச்சநல்லூர் காந்தி பூங்கா அருகே ஓடும் புள்ளம்பாடி வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்ததால் அந்த வாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.
உடனே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் லால்குடி கோட்ட உதவி பொறியாளர் ஹரிகிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் பகுதி செயற்பொறியாளர் விவேகானந்தன் மற்றும் பணியாளர்கள் உடைப்பு ஏற்பட்ட தற்காலிக பாலத்தை மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்தனர். அந்த பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன. கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக பஸ், லாரி போன்ற வாகனங்கள் மண்ணச்சல்லூரில் இருந்து சமயபுரம் வழியாக திருச்சிக்கு சுமார் 12 கி.மீ. சுற்றி சென்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று காலை புள்ளம்பாடி வாய்க்காலில் காந்திபூங்கா அருகே மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தண்ணீர் பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பெருவளை வாய்க்காலில் கலந்து ஓடியதால் புள்ளம்பாடி வாய்க்காலும், பெருவளை வாய்க்காலும் ஒரே வாய்க்கால் போல காட்சியளித்தது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக உடைப்பை சரிசெய்தனர். ஆனால் மாலையில் மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து தண்ணீர் வெளியேறி பெருவளை வாய்க்காலில் விழுந்து வருவதாலும், ஏற்கனவே இந்த வாய்க்காலிலும் அதிக தண்ணீர் ஓடிக் கொண்டிப்பதாலும், எந்த நேரத்திலும் அதன் கரைகளில் உடைப்பு ஏற்படலாம் என்ற நிலை உள்ளது. அந்த வாய்க்காலின் கரையில் உடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடும் அபாயமும் உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மேலும், வெளியேறும் தண்ணீர் பக்கத்தில் உள்ள வயல்களில் புகுந்தால் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். எனவே, திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, புள்ளம்பாடி மற்றும் பெருவளை வாய்க்கால்களின் கரைகளை நிரந்தரமாக பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.