சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி லாரி டிரைவர் பலி
தொப்பூரில் சாலையை கடக்க முயன்ற வாகனம் மோதி லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி தெற்கு ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது40). தர்மபுரியை அடுத்த சோகத்தூரை சேர்ந்தவர் முருகன் (42), லாரி டிரைவர்கள். இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு லாரியில் திருப்பூருக்கு புறப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் லாரியை நிறுத்தி விட்டு கடைக்கு சாப்பிடுவதற்காக சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் லாரிக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மாதையன் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு வாகனம் மாதையன் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
பின்னர் விபத்தில் இறந்த மாதையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதையன் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த மாதையனுக்கு ஆனந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.