மத்திய அரசு, மக்களுக்கு தொடர்ந்து தீங்கு இழைத்து வருகிறது முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி மூலம் சம்மட்டி அடி கொடுத்த மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு தீங்கு இழைத்து வருகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகரம், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா தஞ்சையில் நேற்று நடந்தது. விழாவிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமிவாண்டையார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிங்காரம், செங்குட்டுவன், தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து மீட்புக்குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ஜோசப்ராஜ், பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் வரவேற்றார்.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
20 ஆண்டுகளுக்குப்பிறகு அமைதியான முறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. சட்டை, வேட்டி கிழியாமல் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா கடந்த 1 ஆண்டாக கொண்டாடி வருகிறோம். வருகிற 18-ந்தேதி கோவையில் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது வங்கிகளை தேசியமயமாக்கினார். தலித் மக்களுக்கு அவரைப்போல யாரும் உதவிகள் செய்தது கிடையாது. விவசாயத்தில் புரட்சியை உருவாக்கினார். அதே போல தமிழகத்தில் தற்போது உள்ள அணைகளில் பெரும்பாலும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது தான். இதே போல பல்வேறு புரட்சிகளை செய்த இந்திராகாந்தி மறைவுக்குப்பின்னர் அவரது வழியில் ராஜீவ்காந்தி செயல்பட்டார். ஆனால் அவரை நாம் காப்பாற்ற தவறி விட்டோம். அவருக்கு பின்னர் சோனியா, அவரை தொடர்ந்து ராகுல் செயல்பட்டு வருகிறார்கள்.
மத்திய அரசு நாளுக்கு நாள் எதிர்ப்பை மக்களிடம் சம்பாதித்து வருகிறது. வட்டியில் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி ஆகியவற்றை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் அதைவிட பயங்கரமானது ஜி.எஸ்.டி. வரி. மக்கள் மீது கொண்ட அன்பினால் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவில்லை. குஜராத் தேர்தல் காரணமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வை உடைத்தவர் மோடி தான். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலம் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி காலூன்ற பார்க்கிறது. எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுக்க முடிவு செய்து விட்டார். அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது. அ.தி.மு.க.வின் எல்லா அணிகளையும் இணைத்தாலும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் காலூன்ற முடியாது. அவர்களின் கனவு பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
இந்திராகாந்தி ஆட்சியில் இருந்த போது எந்த தீங்கும் செய்யவில்லை. நன்மைகளை மட்டுமே செய்தார். ஆனால் தற்போது மக்களுக்கு தீங்கு செய்பவர்கள் ஆட்சி தான் நடக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. ஆனால் தற்போது 5.7 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வங்கிகள் கடன் கொடுக்க முடியாமல் தத்தளிக்கிறது.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி மூலம் மத்திய அரசு மக்களுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. அனைத்து பொருளாதார குறியீடுகளும் சீரழிந்து விட்டது. மத்திய பா.ஜ.க. அரசு மக்களுக்கு தொடர்ந்து தீங்கு இழைத்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்துக்கு மேல் இருக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் கேட்க வில்லை. தற்போது குஜராத் தேர்தலுக்காக ஜி.எஸ்.டி. வரியை குறைத்துள்ளனர். ஏழைகளுக்கு தீங்கு இழைப்பது, விவசாயிகளை புறக்கணிக்கும் இந்த அரசு நாட்டிற்கு உகந்தது இல்லை. இந்த அரசை ஏற்க முடியாது. இந்த அரசு தொடர்வதை இனியும் சகிக்க முடியாது. நமது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் லட்சக்கணக்கான இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். இந்த கட்சி தொடர்ந்து இந்தியாவில் பாதுகாக்கப்பட அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, மாநில துணைத்தலைவர்கள் அழகிரி, கலைச்செல்வன், மாநில செயலாளர் பெருமாள், சிறுபான்மைத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், மாநில செய்தி தொடர்பாளர் பென்னட், மனித உரிமை துறை வக்கீல் பிரிவு தலைவர் ஜான்சன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில செயலாளர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், தஞ்சை மாநகர் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் நன்றி கூறினார்.