மூடப்பட்ட குவாரியில் கிரஷர் மண் ஏற்றிய 4 வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடிப்பு
வையம்பட்டி அருகே மூடப்பட்ட குவாரியில் கிரஷர் மண் ஏற்றி வந்த 4 வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.;
வையம்பட்டி,
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டியில் செம்மலை உள்ளது. கடந்த 1982-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்தவர்கள் மீட்கப்பட்டு 1984-ம் ஆண்டு ஒருவருக்கு தலா 1.50 ஏக்கர் வீதம் 7 பேருக்கு செம்மலை அடிவாரத்தில் நிலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிலப்பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக குவாரி அமைத்து கல் மற்றும் கிரஷர் மண் எடுப்பதற்காக 7 பேரிடமும் இருந்து நிலத்தை பவர் பத்திரம் செய்து வாங்கப்பட்டதை தொடர்ந்து குவாரி செயல்பட்டு வந்தது.
அந்த குவாரியில் இருந்து எடுக்கப்படும் கல் மற்றும் கிரஷர் மண் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் எடுத்து நடத்தி வந்தனர். இந்நிலையில் மலை அடிவாரத்தில் கற்கள் எடுப்பதற்காக குவாரியில் சுமார் 150 முதல் 200 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. மேலும் கிரஷர் மணலும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த குவாரிக்கான ஒப்பந்த காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து குவாரியை எடுத்து நடத்தி வந்த நிறுவனத்தினர் வெளியேறி விட்டனர்.
இந்நிலையில் குவாரியில் வேலை செய்து வந்த காவலாளி, அங்கிருந்த கிரஷர் மண் மற்றும் கற்களை லாரி மூலம் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மக்கள் குவாரி மூடப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் குவாரிக்காக தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, அந்த குவாரியில் இருந்து கிரஷர் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் லாரிகளை அந்த பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரம் ஒன்றையும் சிறை பிடித்தனர். இதையறிந்த லாரி டிரைவர்கள் கிரஷர் மண்ணை உடனடியாக அதே இடத்தில் கொட்டினர்.
இருப்பினும் 4 வாகனங்களையும் பொதுமக்கள் சிறைபிடித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாகனங்களில் கிரஷர் மண் இல்லாததால் அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று அவர் கூறியதால் ஆத்திரமடைந்த மக்கள் வாகனங்களை சிறைபிடித்த பின்னர்தான், கிரஷர் மண்ணை கொட்டினர் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய் ஆய்வாளர் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு வாகனங்கனை விடுவித்தனர்.