எட்டயபுரத்தில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகையை அனைத்து வகையான பயிர்களுக்கும் உடனே வழங்க வேண்டும்.
எட்டயபுரம்,
எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகையை அனைத்து வகையான பயிர்களுக்கும் உடனே வழங்க வேண்டும். பழுதடைந்த அனைத்து கிராம சாலைகளையும் சீரமைக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். எட்டயபுரம் மேலவாசலில் இருந்து நடுவிற்பட்டி வரையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர்கள் காளிதாஸ், பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் கார்த்திகேயன், அழகர்சாமி, வரதன், மாநில கலைத்துறை துணை செயலாளர் பொன் ஸ்ரீராம், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் முத்துசெல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர்கள் சிவகுமார், வரதராஜன், மாவட்ட துணை செயலாளர் பவுன் மாரியப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமமூர்த்தி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.