காரைக்குடி அருகே ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள்

காரைக்குடி அருகே செஞ்சையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 2 ஆண், ஒரு பெண் என 3 குழந்தைகள் பிறந்தன.

Update: 2017-11-11 22:30 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 28). இவருடைய மனைவி பிரியாமணி(23). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிரியாமணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று பிரசவத்திற்காக காரைக்குடி அருகே செஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சித்ராதேவி, சண்முகம் ஆகியோர் பிரியாமணியை பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவரது கருவில் 3 குழந்தைகள் இருப்பதாக கூறினர். இதனையடுத்து டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் கடைசியில் அறுவை சிகிச்சை மூலமே குழந்தையை பிரசவிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரியாமணிக்கு அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் பிரியாமணிக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை என 3 அழகான குழந்தைகள் பிறந்தன. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்த தம்பதியினருக்கு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள், உறவினர்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்