பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது.
பெங்களூரு,
பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இதில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா கோரி அரசுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
வடகர்நாடக மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் பெலகாவி சுவர்ண சவுதாவில் கூடுவது வழக்கம்.
சட்டசபை நாளை கூடுகிறது
இந்த ஆண்டு கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7-ந் தேதி தொடங்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 13-ந் தேதி (நாளை) சட்டசபை கூடும் என்று சபாநாயகர் கோலிவாட் அறிவித்தார். இந்த கூட்டத்தொடருக்கு ரூ.26 கோடி செலவாகும் என சட்டசபை மேல்-சபை தலைவர் சங்கரமூர்த்தி கூறியுள்ளார்.
அதன்படி, பெலகாவி மாவட்டத்தில் உள்ள சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. நாளை தொடங்கும் கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற 18 மற்றும் 19-ந் தேதியை தவிர்த்து 10 நாட்கள் நடைபெற உள்ளது.
கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா கோரி...
இந்த கூட்டத்தொடரின் போது 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. அவற்றில் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தும் மசோதா, மூடநம்பிக்கை தடை சட்ட மசோதா சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு சட்டசபையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருப்பதால், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்யக்கோரி சட்டசபையில் பா.ஜனதா சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்துள்ளார்.
தலைமை செயலகம் இடமாற்றம்
இதுதவிர சமீபத்தில் பெய்த மழையால் பல்லாரி, தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த பயிர்கள் நாசமடைந்திருப்பதால், அதற்காக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி அரசை வலியுறுத்த பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக முதல்-மந்திரி சித்த ராமையா, பிற மந்திரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டசபையில் எழுப்பவும் பா.ஜனதாவினர் தீர்மானித்துள்ளனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முதல்-மந்திரி சித்தராமையாவும் மந்திரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி, தற்காலிகமாக தலைமை செயலகம் பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், மேல்-சபை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கு தேவையான வசதிகளும் சுவர்ண சவுதாவில் செய்யப்பட்டு வருகின்றன. கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி சுவர்ண சவுதாவை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.