நாகர்கோவில் அனந்தன்குளத்தில் டிசம்பர் 10–ந் தேதிக்குள் படகு சவாரி தொடங்கப்படும்
நாகர்கோவில் அனந்தன்குளத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10–ந் தேதிக்குள் படகு சவாரி தொடங்கப்படும் என்று விஜயகுமார் எம்.பி. தெரிவித்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் கீழகோணத்தில் அனந்தன்குளம் உள்ளது. பொதுமக்களின் பொழுது போக்குக்காகவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் இந்த குளத்தில் படகு சவாரி தொடங்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நாகர்கோவில் வந்து அனந்தன்குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனந்தன்குளத்தில் படகு சவாரி தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
குமரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து இருப்பதால் அனந்தன்குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இதனால் குளத்தில் படகு சவாரி செய்ய ஏற்ற சுழல் உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் நேற்று அனந்தன்குளத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது படகு சவாரிக்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது பற்றி ஆய்வு செய்தனர். அதன் பிறகு விஜயகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியபோது, ‘குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதனால் சுற்றுலா தலங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மணக்குடி காயலில் ரூ.4 கோடி மதிப்பில் படகு சவாரி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கணபதிபுரத்தில் ரூ.3½ கோடி செலவில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் நாகர்கோவிலில் உள்ள அனந்தன்குளத்தில் படகு சவாரி தொடங்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதி போதுமானதாக இல்லை என்றால் என்னுடைய எம்.பி. நிதியில் இருந்து ஒதுக்கப்படும். இந்த குளத்தில் மோட்டார் படகுகள் விட அனுமதி இல்லை. இதனால் காலால் மிதித்து செல்லக்கூடிய படகுகள் உள்பட மொத்தம் 20 படகுகள் விடப்பட உள்ளன. இதற்கான பணிகளை விரைவில் முடித்து அனந்தன்குளத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10–ந் தேதிக்குள் படகு சவாரி தொடங்கப்படும்’ என்றார்.
ஆய்வின் போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் வேத அருள்சேகர், நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் வசந்தி, சுற்றுலா வளர்ச்சி கழக உதவி பொறியாளர் பவுல், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் ஞானசேகர், கனகராஜ், நாஞ்சில் சந்திரன், ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வின் போது பாசனத்தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் விஜயகுமார் எம்.பி.யை சந்தித்து, ‘அனந்தன்குளத்தில் படகு விட இருப்பதை வரவேற்கிறோம். ஆனால் அதற்கு முன்னதாக குளத்தின் கரைகளை வலுப்படுத்த வேண்டும். மேலும் குளத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்றனர்.