கடன் பிரச்சினையால் போஜ்புரி பட இயக்குனர் தூக்கு போட்டு தற்கொலை

மிராரோட்டில், கடன் பிரச்சினையில் போஜ்புரி பட இயக்குனர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-11-10 22:30 GMT

மும்பை,

மிராரோட்டில், கடன் பிரச்சினையில் போஜ்புரி பட இயக்குனர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இயக்குனர் தற்கொலை

பிரபல போஜ்புரி பட இயக்குனரான சத்குமார் தானே மாவட்டம் மிராரோட்டில் உள்ள நியூ சலோனி ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் சத்குமாரின் மனைவி வெளியில் சென்றிருந்தார். இதன் காரணமாக சத்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில், திடீரென அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி நயாநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கடன் பிரச்சினை

இயக்குனர் சத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இயக்குனர் சத்குமார் கடன் பிரச்சினை காரணமாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட இயக்குனர் சத்குமாருக்கு வயது 49. அவரது உண்மையான பெயர் சம்ஷாத் அகமது ஆகும். அவர் தனது சினிமா வாழ்க்கையை உதவி போட்டோகிராபராக தொடங்கினார். ஏக் லைலா, டீன் சைலா, பாயில் டோரா சே பியார், தும்ஹரே பியார் கி கசம் உள்ளிட்ட பல படங்களை சத்குமார் இயக்கி உள்ளார்.

அவரது இயக்கத்தில் உருவான ‘ஸ்வர்க்’ என்ற போஜ்புரி படம் வருகிற 24–ந் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்