மெட்ரோ ரெயில் தூண்களில் விளம்பரத்துக்கு தடை கேட்ட வழக்கு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது

சென்னையில் மெட்ரோ ரெயில் பாதையின் கீழ் உள்ள தூண்களில் விளம்பர உரிமம் வழங்க தடை கேட்ட வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2017-11-10 22:11 GMT
சென்னை, 

சென்னையில் மெட்ரோ ரெயில் பாதையின் கீழ் உள்ள 592 தூண்களில் விளம்பர உரிமம் வழங்குவதற்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், ‘தூண்களில் விளம்பரம் செய்வது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும், விபத்துகள் ஏற்படும். எனவே, இதில் விளம்பரம் செய்ய தடைவிதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்ட வழக்காக உள்ளது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்