அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிபெற்று ஜனதா தளம்(எஸ்) மீண்டும் ஆட்சி அமைக்கும் குமாரசாமி பேச்சு

சட்டசபை தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிபெற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று குமாரசாமி கூறினார்.

Update: 2017-11-10 21:30 GMT

சிவமொக்கா,

சட்டசபை தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிபெற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று குமாரசாமி கூறினார்.

தேர்தல் பிரசார பயணம்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு ‘விகா‌ஷ வாகினி‘ என்ற பெயரில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி தனது பிரசார பயணத்தை கடந்த 7–ந் தேதி தொடங்கினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவமொக்கா மாவட்டத்திற்கு வந்து குமாரசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். சிவமொக்கா தாலுகா புள்ளாபுரா கிராமத்தில் உள்ள ஒரு தொண்டரின் வீட்டில் தங்கி உணவு சாப்பிட்டார். அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாய கடன் தள்ளுபடி

முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான மாநில அரசு விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் அந்த கடன் தொகை இன்னும் வங்கிகளுக்கு செலுத்தப்படவில்லை. அதற்கான நிதியை மாநில அரசு இந்த ஆண்டு ஒதுக்கவில்லை. இதனால் அடுத்த ஆண்டு (2018) நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் புதிய அரசுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்.

வறட்சியின் காரணமாகவும், விவசாயம் செய்ய பணம் இல்லாத காரணத்தினாலும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை கொண்டு வராத மத்திய–மாநில அரசுகளால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மீண்டும் ஆட்சி அமைக்கும்

கட்சியின் மீதும், கூட்டணி மீதும் அக்கறை கொள்ளும் மாநில அரசு விவசாயிகளின் மீது அக்கறை செலுத்துவது இல்லை.

அடுத்து ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். எங்களது கட்சி மாநிலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெரும் அளவிற்கு எங்களது கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்