திருப்பூரில் கிராம தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கோட்ட கிளை சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-11-10 22:15 GMT

திருப்பூர்,

அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கோட்ட கிளை சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ரகுநாத் முன்னிலை வகித்தார். தாராபுரம் கிளை செயலாளர் ஆறுமுகம், கோட்ட துணை செயலாளர் வெள்ளியங்கிரி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், 7–வது ஊதியக்குழு அறிக்கை அரசுக்கு அளித்து 22 மாதங்கள் ஆகியும் நடைமுறைப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், தபால் இலாகாவின் சேமிப்பு திட்டங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் கோட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார். இதில் திருப்பூர், தாராபுரம், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராமிய தபால் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்