டி.டி.வி. தினகரன் வீட்டில் வருமான வரி சோதனை காரணம் என்ன? என இந்தியாவே சிந்திக்கிறது நடிகர் மயில்சாமி பேட்டி

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் ஒருவேளை இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2017-11-10 22:30 GMT

துடியலூர்,

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் ஒருவேளை இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். நடிகர் மயில்சாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வது, அவர்களிடம் பரிவு காட்டுவது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது ஆகும். அவர்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும். டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடக்கிறது.

 இந்த சோதனை ஏன் நடக்கிறது?. இதற்கு காரணம் என்ன? என தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே சிந்தித்து கொண்டிருக்கிறது. பொதுவாழ்வில் உள்ளவர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார். இதில் கிளப் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஆறுமுகம், குப்புசாமி, துரைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்