தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று பொது வினியோக திட்ட முகாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பொது வினியோக திட்ட முகாம் நடக்க உள்ளது.

Update: 2017-11-10 20:45 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பொது வினியோக திட்ட முகாம் நடக்க உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

பொது வினியோக திட்டம்

பொது வினியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் ஒவ்வொறு மாதமும் 2–வது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாதத்திற்கான முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

இந்த முகாமில், ஸ்மார்டு கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன ஸ்மார்டு கார்டுகளை பெறுதல் போன்றவை தொடர்பான குறைகள் சரிசெய்து தரப்படும். இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து தெரியப்படுத்தலாம்.

மேற்பார்வை அலுவலர்கள்

தூத்துக்குடி தாலுகாவிற்கு தூத்துக்குடி உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு தூத்துக்குடி பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளரும், திருச்செந்தூர் தாலுகாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகாவிற்கு தூத்துக்குடி தனித்துணை ஆட்சியரும் (முத்திரை), கோவில்பட்டி மற்றும் கயத்தாறு தாலுகாக்களுக்கு கோவில்பட்டி உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு தூத்துக்குடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளரும், விளாத்திகுளம் தாலுகாவிற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்