கூத்தாநல்லூர் பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

கூத்தாநல்லூர் பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

Update: 2017-11-10 10:27 GMT
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள குலமாணிக்கம், அன்னுக்குடி, ராமநாதபுரம், கொத்தூர், சோழாட்சி, வடபாதிமங்கலம், பழையனூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அந்தந்த பகுதிகளில் உள்ள வயல்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

அப்போது மழைநீர் தேங்கியுள்ள வயல்களில் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி, வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகனன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

இதே போல கோட்டூர், புழுதுகுடி, பல்லவராயன், கட்டளை, விக்கிரபாண்டியம், குல மாணிக்கம் ஆகிய பகுதிகளில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். 

மேலும் செய்திகள்