மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது 20 இருசக்கர வாகனங்கள் மீட்பு
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 20 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர்கள் எலவனாசூர்கோட்டை ஏழுமலை, எடைக்கல் செல்வநாயகம், உளுந்தூர்பேட்டை மாணிக்கம் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து, மோட்டார் சைக்கிள்கள் திருடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாடு திருட்டு வழக்கில் எறையூர்பாளையம் கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் பாலாஜி(20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் எறையூர்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் ரூ.50 ஆயிரம் திருடியதும், ஆசனூர் டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.25 ஆயிரத்தை பறித்துச் சென்றதும் தெரிந்தது. மேலும் இவர் அதேஊரை சேர்ந்த அருண்(20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார், பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பாலாஜியின் கூட்டாளிகளான அருண் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அருணும், சிறுவனும் எறையூர்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தலைமையிலான போலீசார் எறையூர்பாளையத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அருண் உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த 20 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு, எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே தகவல் அறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டார். மேலும் மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்த போலீசாரை பாராட்டினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வீமராஜ் உடன் இருந்தார்.