தேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கண்காட்சி ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
தேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அரசு துறைகளின் கண்காட்சியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தேனி,
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தேனி அருகே போடி விலக்கு பகுதியில் நேற்று கொண்டா டப் பட்டது. விழாவையொட்டி விழா மேடை அருகில் அரசு துறைகளின் திட்டங்கள் தொடர்பான கண்காட்சி நடந்தது. கண்காட்சி அரங்கை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். பின்னர் அவர் ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டார்.
அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக் கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, தங்கமணி, தேனி எம்.பி. பார்த்திபன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டனர்.
இதில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக் கப்பட்டு இருந்தது. பள்ளிக் கல்வித்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சத்துணவுத்துறை, சமூக நலத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்பட பல் வேறு துறைகளின் சாதனை கள், திட்டங்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவமும், திராட்சைப் பழங்களால் உருவாக்கப்பட்ட யானை உருவமும் பார்வையாளர் களை வெகுவாக கவர்ந்தன. இந்த கண்காட்சியை பொது மக்களும் பார்த்து ரசித்தனர்.