பெஸ்ட் அலுவலர்கள் ரூபாய் நோட்டுகளை வீசி நடனம் வீடியோ வெளியாகி பரபரப்பு

பெஸ்ட் அலுவலர்கள் ரூபாய் நோட்டுகளை வீசி நடனம் ஆடிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2017-11-09 22:29 GMT

மும்பை,

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பெஸ்ட் குழுமம் செயல்பட்டு வருகிறது. வடலாவில் உள்ள பெஸ்ட் குழும அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் டி.வி. நடிகை மாதவி ஜூவேகர் என்பவருடன் ஆபாசமான வகையில் ரூபாய் நோட்டுகளை வீசி ஆட்டம் போடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடலா பெஸ்ட் அலுவலகத்தில் நடந்த தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது தான் அவர்கள் டி.வி. நடிகையுடன் ஆட்டம் போட்டது தெரியவந்து இருக்கிறது.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பெஸ்ட் அலுவலர்களின் இந்த செயல் அவமானப்பட வேண்டியது என்று பெஸ்ட் பஸ் பயணிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக பெஸ்ட் குழும மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பெஸ்ட் அலுவலர்கள் முகம் சுளிக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளை வீசி நடனம் ஆடியது பற்றி துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது அங்கு இருந்த 12 அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது’’ என்றார்.

அதே நேரத்தில் பெஸ்ட் அலுவலர்கள் வீசியது உண்மையான ரூபாய் நோட்டுகள் இல்லை. அவை போலியானவை என பெஸ்ட் அலுவலர் ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்