மகள் இறந்த துக்கம் தாங்காமல் திராவகம் குடித்து தாய் தற்கொலை
செம்பாக்கத்தில் மகள் இறந்த துக்கம் தாங்காமல் திராவகம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த செம்பாக்கம், டெல்லஸ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி தேவந்தி (வயது 50). இவர்களுக்கு 14 வயதில் மகள் இருந்தாள்.
வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த சிறுமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாள்.
தாய் தற்கொலை
மகள் இறந்ததால், தேவந்தி மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென தேவந்தி திராவகம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட குடும்பத்தினர் மேடவாக்கம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.